ETV Bharat / state

SPEClAL: டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்

பல பெரிய நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளை வெளி நாடுகளில் சந்தைப் படுத்த பல்வேறு விளம்பர யுக்திகளை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் செல்போன் சிக்னல், இணையதளம், போன்ற வசதிகள் இல்லாத இடத்தில் இருந்து தங்களுடைய முழு உழைப்பையும் கை வண்ணத்தையும் கொண்டு தயாரிக்கப்பட்ட மண் பாண்டங்களை தொண்டு அமைப்பு மூலம் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர் கோவையைச் சார்ந்த பழங்குடியின பெண்கள். அது குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு.

டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்

author img

By

Published : Oct 29, 2022, 12:07 PM IST

Updated : Oct 29, 2022, 5:22 PM IST

கோயம்புத்தூர்: ஆனைகட்டி அருகேவுள்ள ‘தயா சேவா சதன்’ என்ற தொண்டு நிறுவனத்தில் கொண்டனூர், பனப்பள்ளி மலை கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியின பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அங்கு களி மண்ணால் ஆன டம்ளர், பிளேட், மற்றும் கையால் நெசவு செய்யப்பட்ட விரிப்புகள், மூலிகை தேன் வகைகள், மற்றும் ஜாம் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தை விஞ்ஞானி சௌந்தரராஜன் கடந்த 2012ஆம் ஆண்டு தொடங்கி நடத்தி வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், “பழங்குடியின பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு பொருள்களை தயாரித்து வருகிறோம். 30க்கும் மேற்பட்ட ஆதிவாசி பெண்களின் வாழ்வாதாரமாக இம் மையம் செயல்பட்டு வருகிறது.

சௌந்தர்ராஜன் - தயா சேவா சதன் தொண்டு நிறுவனம்
டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்
டீ கப் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பழங்குடியின பெண்கள்

வாழை நாரில் நூல் எடுத்து யோகா மேட் தயாரிக்கிறோம் பைகள், துணிகள் செய்கிறோம். டெரகோட்டா எனும் களிமண்ணில் பல்வேறு பொருள்கள் செய்து வருகிறோம். ஆயுர்வேதா பொருள்களாக ஆல்கஹால் இல்லாத சானிடைசர் செய்து வருகிறோம். பல்வேறு வகையான சோப்புகள் தயாரித்து வருகிறோம்.

குழந்தைகளுக்காக நெல்லிக்காய் ஜாம், பலாப்பழ ஜாம் தயாரித்து விற்பனை செய்கிறோம். தற்போது நாங்கள் தயாரிக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட டீ கப், கத்தார் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதற்கட்டமாக 10ஆயிரம் கப் அனுப்ப உள்ளோம்” என தெரிவித்தார்.

இது குறித்து அங்கு பணியாற்றும் பழங்குடியின பெண்கள் கூறுகையில், “பழங்குடியின ஏழைப் பெண்கள், ஆதரவற்றோர், கணவனை இழந்த பெண்கள் என பலர் இங்கு பணியாற்றி வருகிறார்கள். எங்களுக்கு பயிற்சி அளித்து பொருள்களை செய்ய வைப்பதால் அதனை ஆர்வமுடன் செய்து வருகிறோம். எங்களுடைய தயாரிப்புகள் வெளி நாடு செல்கிறது. இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பாக்கு மட்டை முதல் ஜாம், தேன் போன்ற உணவு பொருள்கள் செய்து வருகிறோம்.

டீ கப் தயாரிப்பது என்பது சவாலான பணி. அதனை ஆர்வமுடன் முழு கவனம் செலுத்தி செய்வதால் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எங்கள் கைகளால் செய்யப்படும் பொருள்கள் வெளிநாடு செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. படித்தவர்களை காட்டிலும் குறைந்த கல்வி அறிவு கொண்ட எங்களுடைய தயாரிப்புகள் வெளிநாடு செல்வது பெருமை அளிக்கிறது. அதேசமயம் எங்களுக்கு தன்நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது” என்கின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல் - கைத்தறி பட்டு சேலை வாங்க ஆர்வம்

Last Updated : Oct 29, 2022, 5:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.