ஆனைமலை மாசாணியம்மன் கோயில், டாப்சிலிப், பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இவ்வழியாக செல்லும்போது புளியமரத்தின் நிழலில் நின்று இளப்பாறியும், உணவருந்தியும், சுயமி (செல்ஃபி) எடுத்தும் மகிழ்ந்து செல்கின்றனர்.
சிறு வியாபாரிகளின் உணவகங்கள், கம்பங்கூழ் வண்டிகள் என மரத்தின் நிழல் பகுதியில் வியாபாரமும் நடைபெறுகிறது. சில வருடங்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆனைமலை சாலையை அகலப்படுத்துவதற்காக புளியமரங்கள் வெட்ட டெண்டர் விட்டது.
அச்சமயம் பிரதான கட்சிகள், அமைப்புகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் இத்திட்டம் கைவிடப்பட்டது. இதனால், மக்கள் இளைப்பாறும், மனதை இன்பமாக்கி நிழல்தரும் புளிய மரங்கள் தப்பித்தன.
இந்நிலையில், அரசு இனிமேல் ஆனைமலை சாலையில் உள்ள மரங்களை வெட்டாமல் பாதுகாக்க வேண்டும் என தன்னார்வலர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.