ETV Bharat / state

அரசு போக்குவரத்து கழக ஊழியருக்கு 383 ஆண்டு சிறை - காரணம் என்ன?

மோசடி வழக்கில் முன்னாள் அரசு போக்குவரத்து கழக ஊழியருக்கு 383 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Transport Corporation officer sentenced to 383 years in prison at Covai
அரசு போக்குவரத்து கழக ஊழியருக்கு 383 ஆண்டு சிறை
author img

By

Published : Jul 29, 2023, 7:36 AM IST

Updated : Jul 29, 2023, 8:31 AM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் கோவை கோட்டம், கோவையை தலைமையிடமாக கொண்டு சேரன் போக்குவரத்துக் கழகம் செயல்பட்டு வந்தது. இதற்கு சொந்தமான 47 பழைய பேருந்துகளை ஏலம் விட்டதில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் உள்ளிட்ட 8 பேர் போலி ஆவணங்கள் தயாரித்து 28 லட்சத்து 20 ஆயிரத்து 94 ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதாக 9.11.1988 ஆம் ஆண்டு சேரன் போக்குவரத்துக்கழகத்தின் பொதுமேலாளர் ரங்கசாமி கோவை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் செய்தார்.

இந்த புகாரை விசாரித்த போலீசார் சேரன் போக்குவரத்துக்கழகத்தில் உதவியாளராக இருந்த கோதண்டபாணி(82), துணைமேலாளர் ராமச்சந்திரன், நாகராஜன், நடராஜன், முருகனாதன், துரைசாமி, ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகிய 8 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் போதே ராமச்சந்திரன், நடராஜன், ரங்கநாதன், ராஜேந்திரன் ஆகியோர் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 4 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி கோதண்டபாணி, நாகராஜன், முருகனாதன், துரைசாமி ஆகியோர் கோர்ட்டில் ஆஜரானார்கள். தற்போது நீதிபதி சிவக்குமார் அளித்த தீர்ப்பில் கோதண்டபாணி தவிர மற்ற 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கோதண்டபாணியின் மீதான குற்றச்சாட்டுகள் 3 பிரிவுகளின் கீழ் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தீர்ப்பளித்தார். அதாவது, நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் 47 குற்றங்களுக்கு தலா 4 ஆண்டுகள் வீதம் 188 ஆண்டுகளும், போலி ஆவணங்களை தயாரித்ததற்காக 47 குற்றங்களுக்கு தலா 4 ஆண்டுகள் என 188 ஆண்டுகளும், அரசு சொத்தை களவாடிய குற்றத்திற்கு 7 ஆண்டுகள் என்று மொத்தம் 383 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தற்போது குற்றவாளியின் வயதை கணக்கில் கொண்டு தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அதிகபட்சமாக கோதண்டபாணி 7 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். மேலும் குற்றவாளிக்கு 3 கோடியே 32 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை குற்றவாளி செலுத்தினால், தற்போது கோவை அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஒருவேளை அபராதத் தொகையை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு கூடுதலாக சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கோவை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். தற்போது இந்த மோசடி வழக்கில் 383 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் கோவை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: நெய்வேலி வன்முறை: 21 போலீசார் படுகாயம்; அன்புமணி ராமதாஸ் விடுவிப்பு!

Last Updated : Jul 29, 2023, 8:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.