ETV Bharat / state

கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி முகாம்! - Vetenary Doctors

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில், கால்நடை மருத்துவர்களுக்கு, வனவிலங்குகளை கையாள்வது பற்றியும்  ஆபத்து காலங்களில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து  முதலுதவி செய்வது பற்றியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

camp- vetenary-doctors
author img

By

Published : May 12, 2019, 3:05 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில், அரசு கால்நடை மருத்துவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது. வீட்டு விலங்குகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்த கால்நடை மருத்துவர்களுக்கு, விளை நிலங்கள், ஊருக்குள் புகும் காட்டு விலங்குகளை கையாள்வது பற்றியும் ஆபத்து சமயத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது பற்றியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.

சமீப காலமாக வனங்களை ஒட்டிய கிராமங்களிலும், வால்பாறை, ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களிலும் காட்டு யானை சிறுத்தை காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வந்து செல்வது அதிகரித்துள்ளன. இவற்றை மீண்டும் வனத்தினுள் விரட்டுவதற்கும் அல்லது பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கும் வனத் துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் கால்நடை மருத்துவர்களின் பங்கும் முக்கியமானது.

தமிழ்நாடு வனத்துறையில் போதிய கால்நடை மருத்துவர்கள் இல்லாததால், கால்நடை பராமரிப்புத் துறையில் பணியாற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு இது பற்றிய பயிற்சி கொடுக்க வனத்துறை முடிவு செய்தது. முதல் கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 20 கால்நடை மருத்துவர்களுக்கு இந்தப் பயிற்சி கொடுக்கப்பட்டது.

கால்நடை மருத்துவர்களுக்கு பயிற்சி முகாம்

இதில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளைக் கூண்டு வைத்து பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்றும், கரடி போன்ற விலங்குகளை வலை போட்டுப் பிடிப்பது பற்றியும் யானை, காட்டெருமை போன்ற விலங்குகளை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது பற்றியும் இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிப்பது பற்றிய சிறப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் இறந்த காட்டு விலங்குகளை உடற்கூறு ஆய்வு செய்வது பற்றியும் இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பொள்ளாச்சி -மே-12
        கால்நடை மருத்துவர்களுக்கு, வனவிலங்குகளை கையாள்வது பற்றியும்  ஆபத்துக்காலங்களில் மயக்க ஊசி செலுத்தி பிடித்து  முதலுதவி செய்வது பற்றியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்சிலிப்பில், அரசு கால்நடை மருத்துவர்களுக்கு  சிறப்பு முகாம் நடைபெற்றது. வீட்டு விலங்குகளுக்கு மட்டுமே சிகிச்சை அளித்து வந்த கால்நடை மருத்துவர்களுக்கு, விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் புகும் காட்டு விலங்குகளை கையாள்வது பற்றியும் ஆபத்து சமயத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது பற்றியும் பயிற்சி முகாம் நடைபெற்றது.  சமீப காலமாக வனங்களை ஒட்டிய கிராமங்களிலும், வால்பாறை, ஊட்டி போன்ற மலை பிரதேசங்களிலும்  காட்டு யானை சிறுத்தை காட்டெருமை போன்ற வனவிலங்குகள் வந்து செல்வது அதிகரித்துள்ளது. இவற்றை மீண்டும் வனத்தினுள் விரட்டுவதற்கும் அல்லது பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விடுவதற்கும்  வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோன்ற சமயங்களில் கால்நடை மருத்துவர்களின் பங்கு முக்கியமானது.  தமிழ்நாடு வனத்துறையில் போதிய கால்நடை  மருத்துவர்கள் இல்லாததால், கால்நடை பராமரிப்பு துறையில் பணியாற்றும்  கால்நடை மருத்துவர்களுக்கு இது பற்றிய பயிற்சி கொடுக்க வனத்துறை முடிவு செய்தது. முதல் கட்டமாக கோவை திருப்பூர் மாவட்டங்களில் இருந்து 20 கால்நடை மருத்துவர்களுக்கு இந்த பயிற்சி கொடுக்கப்பட்டது.  இதில், புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை கூண்டு வைத்து பிடிப்பது  ஏதுவாக இருக்கும் என்றும் கரடி போன்ற விலங்குகளை வலை போட்டு பிடிப்பது  பற்றியும் யானை, காட்டெருமை போன்ற விலங்குகளை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது பற்றியும்  இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளைப் பிடிப்பது பற்றிய சிறப்பு பயிற்சியும்  அளிக்கப்பட்டது இதுமட்டுமல்லாமல் இறந்த காட்டு விலங்குகளை உடற்கூறு ஆய்வு செய்வது பற்றியும் இந்த முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.