சென்னையைச் சேர்ந்த விஜயன் என்பவர் அவரது குடும்பத்தாருடன் கோடை விடுமுறையை கொண்டாட சென்னையிலிருந்து கன்னியகுமாரி, ராமேஸ்வரம், திருச்செந்தூர், மதுரை, பழனி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்குச் செல்ல திட்டமிட்டதாகத் தெரிகிறது.
அதன்படி, நேற்று வால்பாறையில் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, அங்கிருந்து பொள்ளாச்சிக்கு செல்ல விஜயனனின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். அப்போது, வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த விஜயனின் வேன், வால்பாறை மூன்றாவது கொண்டை ஊசி வளைவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பாறை மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது. இதில், ஒரு பெண், குழந்தை உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, காடம்பாறை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.