ETV Bharat / state

"அண்ணாமலை ஒரு கோமாளி": அமைச்சர் ராமச்சந்திரன் - bjp

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு கோமாளி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை தெரியாமல் எழுதிக் கொடுத்ததை அப்படியே பேசிவிட்டு செல்கிறார் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.

"அண்ணாமலை ஒரு கோமாளி": அமைச்சர் ராமச்சந்திரன்

author img

By

Published : Jan 15, 2023, 12:47 PM IST

’அண்ணாமலை ஒரு கோமாளி, தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை தெரியாமல் பேசுகிறார்’

கோயம்புத்தூர்: தமிழ்நாடு அரசு சார்பில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 8 நாடுகளைச் சேர்ந்த 13 பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினராக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்று பலூன் இயக்கம், பைலட்டுகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

பின் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, "தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் 3-வது இடத்தில் உள்ளது. வால்பாறையை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, விரைவில் சுற்றுலா தலமாக செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி நுழைவுக்கட்டணம் மற்றும் பலூனில் பறக்க கட்டணம் ஆகியவற்றைக் குறைக்க வரும் காலங்களில் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

தமிழ்நாடு பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு கோமாளி. ஊட்டிக்கு வந்த பொழுது தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை தெரியாமல் எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டு சென்றவர்' என அமைச்சர் அண்ணாமலையை சாடினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஹெலிகாப்டரில் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.