கோயம்புத்தூர்: இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் இருந்தாலும் மளிகை கடை, காய்கறி கடை, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் வாங்குவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நீதிமன்றம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை புறக்கணிக்க கூடாது என அறிவுரை வழங்கி உள்ளது.
ஆனாலும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு மின்சார வாரிய அலுவலகம் எதிரே இன்று (நவ.10) புதிதாக யாழ் பிரியாணி கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கடை திறப்பு விழாவை முன்னிட்டு 10 ரூபாய் நாணயங்களை முதலில் கொண்டுவரும் 125 நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம் 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதனையடுத்து பிரியாணி கடை முன்பு ஏராளமானோர் குவிந்தனர்.
இதையும் படிங்க: தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கவுண்ட்களுக்கு ”ப்ளூ டிக்” சேவை நிறுத்தம்! டிவிட்டர் அதிரடி