கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற தெய்வீக தமிழ்நாடு சங்க விழாவை ஆர்எஸ்எஸ் மாநில தலைவர் மாரிமுத்து தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "இளைஞர்கள் மத்தியில் கலாசாரம், பண்பாடு தற்போது குறைந்து வருவதற்கு காரணம் அரசியல்வாதிகள். இச்சூழ்நிலை தொடர்ந்தால் மகாத்மா போன்ற பெரிய தலைவர்கள் வந்தால்கூட மாற்ற முடியாது.
தற்போதுள்ள அரசியல்வாதிகள் அடியாள்கள், பணபலத்தின் மூலம் சமுதாயத்தை ஒடுக்க முயல்கின்றனர். தேச நலனைவிட காசு நலன்தான் முக்கியமாக உள்ளது. எனவே பொது மக்கள், இளைஞர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தேசியம் காக்க, தமிழ்நாட்டை காக்க என்ற கையேடு தெய்வீக தமிழ்நாடு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை கோடி பிரதிகள் விநியோகிக்கப்படவுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சூரப்பாவிற்கு ஆதரவாக இரண்டு மாணவர்கள் போராட்டம்!