ETV Bharat / state

லாரியில் பேட்டரி திருட்டு: ஆறு பேரை கைது செய்த போலீஸ்! - Theft incident

கோவை: பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக லாரியிலிருந்து பேட்டரி திருட்டில் ஈடுபட்ட ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

pollachi
author img

By

Published : Jul 21, 2019, 7:40 PM IST

கோவை பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துமணி, நேற்று முன் தினம் கோட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். அவர் திரும்பிவந்து பார்க்கும்போது லாரியில் இருந்து பேட்டரி திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து ஆழியார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த யுகேஸ்வரன், ஆதான் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் இதுபோல பல இடங்களில் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் திருடி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 15 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்புடைய சஜித், சதீஷ்குமார், விக்னேஷ், மதன்குமார் ஆகிய நான்கு பேரையும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்தும் 35-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா, இதேபோல் வேறு எங்கேயாவது பேட்டரிகளை பதுக்கி வைத்துள்ளனரா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேட்டரி திருட்டு சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுநர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாரியில் பேட்டரி திருட்டு

Intro:battery theftBody:battery theftConclusion:பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் பல மாதங்களாக லாரியிலிருந்து பேட்டரி திருட்டு 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை.

பொள்ளாச்சி - ஜூலை- 21

பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் பகுதியில் வசித்து வருபவர் லாரி ஓட்டுனர் முத்துமணி இவர் நேற்று முன் தினம் கோட்டூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்க்கும்போது லாரியில் இருந்து பேட்டரி திருடு போனது தெரியவந்தது இதையடுத்து ஆழியார் காவல் நிலைய போலீஸாரிடம் புகார் அளித்ததின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த யுகேஸ்வரன், மற்றும் ஆதான் இப்ராஹிம் ஆகிய இருவரையும் கைது செய்து நடத்திய விசாரணையில் இதுபோல பல இடங்களில் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் திருடி விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 15 பேட்டரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்களுடன் தொடர்புடைய சஜித், சதீஷ்குமார், விக்னேஷ், மதன்குமார் ஆகிய நான்கு பேரையும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இவர்கள் 6 பேரும் கூட்டாக இதேபோன்று பல இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் லாரிகளில் இருந்து பேட்டரிகளை திருடி விற்றது தெரியவந்தது இதையடுத்து இந்த 6 பேரிடமும் இருந்து மொத்தம் 35 ற்க்கும் மேற்பட்ட பேட்டரிகள் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் இவர்கள் ஆறு பேருடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா இதேபோல வேறு எங்கேயாவது பேட்டரிகளை பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பேட்டரி திருட்டு சம்பவம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள லாரி ஓட்டுனர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.