தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானலுக்கு அடுத்து மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் வால்பாறைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு அருவி என இயற்கை எழில் கொஞ்சும் அழகை இரு மலைகளின் நடுவே இருக்கும் ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவின் அருகே உள்ள காட்சி முனையிலிருந்து ரசித்துவிட்டு, புகைப்படம் எடுத்துச் செல்வார்கள்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வனத் துறையினர் காட்சி முனையை மூடிவிட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறுகையில், ஒன்பதாவது கொண்டை ஊசியில் உள்ள காட்சிமுனை புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்க இருப்பதால் தற்காலிகமாக அது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.