ETV Bharat / state

கோவையில் 19ஆம் தேதி புத்தக திருவிழா தொடக்கம்! - book festival

கோவை: தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் ஐந்தாவது ஆண்டு புத்தகத் கண்காட்சி கோவையில் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

கோவையில் 19ஆம் தேதி புத்தக திருவிழா துவக்கம்.
author img

By

Published : Jul 16, 2019, 9:05 PM IST

கோவை கொடிசியா வளாகத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் புத்தக திருவிழா பத்து நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும். இந்த புத்தக திருவிழாவிற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வருகை தருவார்கள்.

இந்த வருடம் 19ஆம் தேதி தொடங்கவுள்ள இப்புத்தக திருவிழாப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கொடிசியா தலைவர் ராமமூர்த்தி, ‘கொடிசியா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த புத்தக கண்காட்சியில் 150 பதிப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள். இளம் புத்தகப் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி. பேச்சுப் போட்டிகள் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

கொடிசியா வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு

கடந்த ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மூன்று கோடி ரூபாய்க்கு விற்பனை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புத்தக கண்காட்சிக்கு செல்ல கோவையில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும்’ என்றார்.

Intro:கோவையில் வரும் 19ஆம் தேதி புத்தக திருவிழா துவங்க உள்ளது

Body:கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சார்பில் ஐந்தாவது ஆண்டாக புத்தகத் கண்காட்சி கோவையில் நடைபெற உள்ளது. இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசுகையில் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்த புத்தக கண்காட்சியில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் இளம் படைப்பாளிகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பேச்சுப் போட்டிகள் கலை இலக்கிய நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக ராமமூர்த்தி தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150 பதிப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.இதற்காக 250 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது, கடந்த ஆண்டு ஒன்றரை கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 3 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்த புத்தக கண்காட்சிக்கு செல்ல சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.