ETV Bharat / state

அதிமுக ஐடி விங் நிர்வாகிகளிடம் சட்டப்பேரவை தேர்தல் குறித்த ஆலோசனை! - அதிமுக ஐடி விங்

கோவை: பொள்ளாச்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகர அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி வெற்றி பெறுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

admk meet
admk meet
author img

By

Published : Aug 7, 2020, 6:16 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரப்பகுதியில் உள்ள 36 வார்டுகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு, கிளைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் புதிய நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள மின்னல் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி நகர கழகச் செயலாளாரும், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கிருஷ்ணகுமார் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கூட்டத்தில் பேசிய ஜெயராமன், "இந்த தேர்தல் பரப்புரை என்பது தகவல் தொழில்நுட்பம் மூலம் மட்டுமே மக்களை சந்திக்கும் நிலை வந்துள்ளது. இதனால் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் அதிமுக அரசின் செயல்பாடுகளை தகவல் தொழில்நுட்பம் மூலம் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும். இதேபோல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிளை செயலாளர்கள், பல்வேறு பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்கு கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.

மேலும் வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான செயல் திட்டங்கள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'திமுகவில் யாரையும் வளர விடுவதில்லை' அதிமுகவில் இணைந்த முன்னாள் ஒன்றியக் குழு தலைவர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.