ETV Bharat / state

அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம் - பாஜக

அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி திராவிடர் இயக்க தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Nov 6, 2022, 5:31 PM IST

கோயம்புத்தூர்: கோவையின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாகக்கூறி, பாஜக தலைவர் அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார். இதற்கு தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் டிஜிபி சைலேந்திரபாபு எதிர் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் காவல்துறையையும், அமைச்சர் செந்தில் பாலாஜியையும், அவதூறாகப்பேசி கோவையின் ஒற்றுமை, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க முயலும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயலாளர் கா.சு.நாகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி கண்டனங்களை தெரிவித்தனர்.

அண்ணாமலையைக் கைது செய்ய வலியுறுத்தி திராவிட இயக்கத் தமிழர் பேரவை ஆர்ப்பாட்டம்

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு ...என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.