நீலகிரிப் பகுதியில் நான்கு பேரை அடித்துக்கொன்ற T-23 புலி பிடிபட்டது.
மசினக்குடி, கூடலூர், தேவர்சோலை உள்ளிட்டப் பகுதிகளில் நான்கு மனிதர்கள், 50-க்கும் மேற்பட்ட கால்நடைகளை வேட்டையாடிக்கொன்ற புலியைப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட நாள்களாக தேடி வந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், நான்கு கால்நடை மருத்துவக்குழுவினர், இரண்டு கும்கி யானைகள், மூன்று மோப்ப நாய்கள், வனப்பகுதியில் 65 கேமராக்கள், அதி நவீன ட்ரோன் கேமரா எனப் பல வகைகளில் மசினக்குடி வனப்பகுதியில் புலியைத்தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்றிரவு சுமார் 10 மணிக்கு புலிக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இதன்காரணமாக, புலி அருகில் உள்ள புதருக்குள் சென்று மறைந்து கொண்டது. அதன்பின், இரண்டாவது முறையாக சாலையைக் கடக்க முயன்ற அப்புலி மீது இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இன்று(அக்.15) நண்பகல் புதருக்குள் மயங்கிக்கிடந்த புலியை வனத்துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பின்னர், சிறிதுநேரத்தில் புலியை அடைக்க வைக்கப்பட்டிருந்த கூண்டிற்குள் கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டது.
இதையும் படிங்க: போக்குக் காட்டிய டி23 புலி பிடிபடுவது உறுதி