கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குள்பட்ட காலனிபுதூர் பழங்குடியினர் கிராமத்தினர் மான் கறி வைத்திருப்பதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் வனவர் மதுசூதனன் தலைமையில் அங்கு சென்று வனத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அதில், அதே கிராமத்தைச் சேர்ந்த குருந்தாசலம், கோபால், தாசனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகன் ஆகியோர் மான் கறி வைத்திருந்ததும் கிராமத்திற்குள் வந்த புள்ளிமானை நாய்கள் வைத்து வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மூன்று பேரையும் கைதுசெய்த வனத் துறையினர் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.