ETV Bharat / state

'தமிழ்நாட்டில் தமிழ்மொழி பேச்சுமொழியாக மாறும் நிலைமை வரக்கூடும்' - வைரமுத்து எச்சரிக்கை - vairamuthu 70th birthday

கோவையில் கவிஞர் வைரமுத்துவின் 70ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டமும், சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாகவும் "வைரமுத்து இலக்கியம் 50" என்ற பெயரில் இலக்கியப் பெருவிழா நடைபெற்றது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேச்சு மொழியாக மாறும் நிலைமை வரக்கூடும்

author img

By

Published : Jul 14, 2022, 4:09 PM IST

கோவை காளப்பட்டியில் உள்ள சுகுணா கலையரங்கில் வைரமுத்துவின் 70ஆம் பிறந்தநாள் கொண்டாட்டமும், சினிமா துறையில் 50 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விதமாக "வைரமுத்து இலக்கியம் 50" என்ற பெயரில் இலக்கிய பெருவிழாவும் நடைபெற்றது. இதில் பா.சிதம்பரம் எம்.பி., அமைச்சர் துரைமுருகன், இசையமைப்பாளர் தேவா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

வடுகபட்டி தந்த தமிழ்க்குழந்தை வைரமுத்து: இதில் உரையாற்றிய பா.சிதம்பரம் எம்.பி., '21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மிகச்சிறந்த கவிஞர் வைரமுத்து. வைரமுத்து கவி பாடுகின்ற காலத்தில் நாங்கள் வாழ்வதில் மகிழ்ச்சி. வைரமுத்து 17 வயதிலிருந்து புத்தகம் எழுதத் தொடங்கியவர். வடுகபட்டியில் இருந்து வாஷிங்டன் வரை புகழைப் பரப்பி இருக்கிறார்.

வடுகபட்டி தந்த தமிழ்க்குழந்தை கவிப்பேரரசாக உருவானதைக்கண்டு நான் பூரிப்படைகிறேன். இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி இறந்து போய்க்கொண்டிருக்கிறது. இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் பல்வேறு மொழிகள் அழிக்கப்பட்டு விட்டன. மொழி என்பது மிகவும் முக்கியம், ஆட்சியில் இல்லாத மொழி அழிந்து போகும்.

தமிழ் மொழி தொடர்ந்து ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். இன்னொரு மொழிக்கு இடம் தந்துவிடக் கூடாது. தமிழ் மொழி தான் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் இணைக்கும். தமிழ் மொழி பொலிவுடன் இருக்கும் வரை உங்களை(வைரமுத்து) வாழ்த்தும் தமிழை வளர்க்க வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது' எனத் தெரிவித்தார்.

அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், 'வைரமுத்து கலைஞரிடம் பெரும் மதிப்பு பெற்றவர். இவ்வுலகில் கற்பனை இல்லாத மனிதனே இருக்க மாட்டான். கவிதையில் எந்த அளவிற்கு வைரமுத்துவிற்கு ஜாலம் உள்ளதோ அதை விட உரைநடை வீச்சு அவரிடம் உள்ளது. இன்று வாழும் பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன் அனைத்தும் நீங்கள் தான்’ எனத் தெரிவித்தார். மேலும் கலைஞர் வைரமுத்துவைப் பற்றி புகழ்ந்ததையும்; வைரமுத்து குறித்து கலைஞர் கவி எழுதியதையும் நினைவு கூர்ந்தார்.

இதில் உரையாற்றிய இசையமைப்பாளர் தேவா, 'கவிப்பேரரசு வைரமுத்து மிகவும் நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது என்னுடைய பாக்கியம். ஒவ்வொரு தமிழர் விழாவுக்கும் வைரமுத்து எழுதி நான் இசைத்த பாடல்கள் தான் அதிகம் ஒலிக்கப்படுகிறது. மற்றவர்களை சாப்பிட வைத்து அழகு பார்ப்பவர் வைரமுத்து. எந்தவொரு தலைக்கணமும் இல்லாத மனிதர் அவர். அவர் என்னுடைய பேரனுக்கும் பாடல் எழுத வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

வைரமுத்துவின் 70ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்ட விழா
'பா.சிதம்பரத்தால் இந்தியா இலங்கைபோல் ஆகவில்லை': இவ்விழாவில் ஏற்புரை ஆற்றிய கவிஞர் வைரமுத்து, 'மக்களால் தான் நான் ஊக்கம் பெறுகிறேன். இந்தியாவில் பொருளாதாரம் கரோனாவிற்குப் பின்னும் சரியாமலும் இலங்கை போல் ஆகாமலும் இருக்கிறது என்று சொன்னால் அது சிதம்பரத்தால் தான்.

சிதம்பரத்தின் நூல்களை வாங்கிப் படியுங்கள். உரையாடல் நெறி என்ன என்பதை அவரிடம் உரையாடும்போது கற்றுக் கொள்கிறேன். வடுகபட்டி வைரமுத்து பட்ட துயரம் மட்டுமல்ல, வைரமுத்துவைப் போல் பல பேர் கவலைப்படுகிறார்கள் என்ற எண்ணம் சிதம்பரத்திடம் உள்ளது.

'சிவனைவிட பெரியவர் துரைமுருகன்': கலைகளைக் கண்டாலும் ஒலிப்பெருக்கியை கண்டாலும் பொங்கி விடுவார், துரைமுருகன் அவர்கள். திமுகவின் பொதுச்செயலாளர் பதவியை நீங்கள் வகிப்பது உங்கள் வாழ்வின் உச்சம். அண்ணா வகித்த பதவி அது. துரைமுருகனுக்கு பள்ளிக்கட்டணம் கட்டி, பேனா புத்தகங்கள் வாங்கிக்கொடுத்தது எம்ஜிஆர். சிவனை விட பெரியவர் துரைமுருகன். ஜெயலலிதாவே துரை முருகனிடம் நீங்கள் நடிக்க சென்றிருந்தால் பல நடிகர்கள் பின்னடைவைச் சந்தித்து இருப்பீர்கள் என்று கூறியுள்ளார். சிவன் தலையில் நீரை வைத்திருப்பார். ஆனால், துரைமுருகன் அவரது கையில் நீர் வளத்துறையை வைத்துள்ளார்.

பிறந்தநாள் என்று சொன்னவுடன் மார்பு படபடக்கும், அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்கும். இன்றைக்கு நான் யாரையும் தொட்டுப்பேசவில்லை என்பது மிகப்பெரிய குறையாக உள்ளது. மேலும் மொழியை பலர் கருவி என்று நினைக்கிறார்கள்.

மொழி என்பது கருவி அல்ல... பண்பாடு, மதித்தல். அரசுப் பள்ளிகளிலும் சரி, தனியார் பள்ளிகளிலும் சரி, மிகப்பெரிய ஆதங்கம் ஒன்று உண்டு. அது மாணவர்களை தமிழ்ப் படிக்கச் சொன்னால் படிக்கத் தெரிவதில்லை, எழுதச் சொன்னால் தமிழ் எழுதத் தெரிவதில்லை. 50 ஆண்டுகள் இந்த நிலைமை தொடர்ந்தால் தமிழ் நாட்டிலேயே தமிழ் வெறும் பேச்சு மொழியாகிவிடும் விபத்து நடைபெறும்.

தனியார் பள்ளிகளும், அரசுப் பள்ளிகளும் பள்ளிகளில் மாணவர்களுக்கு தமிழ்ப் படித்தல் பயிற்சி, எழுத்துப் பயிற்சி, இவைகளை எல்லாம் அளிக்க வேண்டும். தேர்வு மட்டும் போதாது. மொழி என்பது வாழ்வோடு சம்பந்தப்பட்டது. எனவே தேர்வைத் தாண்டி மொழியை வாழ்வோடு கொண்டு வர வேண்டும்.

இந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மொழிப் பாடத்திலேயே தேர்ச்சி பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே மொழிப்பாடத்தை மேம்படுத்த உரிய திட்டங்களை இந்த மண்ணுக்கு வகுத்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் கல்வியுகமும் அறிவுயுகமும் சேர்ந்து செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: JEE தேர்வில் முதலிடம் பிடித்த கோவை மாணவிக்கு பாராட்டு விழா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.