கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பெரியகளந்தையில் சிலிண்டர்களுக்கு எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலைக்கு 17 டன் எரிவாயுவை நிரப்பிக்கொண்டு கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து டேங்கர் லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (25) என்பவர் ஓட்டிவந்தார்.
இந்நிலையில், நேற்று காலை உணவகத்திற்குச் செல்லவதற்காக ஓட்டுநர், லாரியை ஓட்டிச் சென்றுள்ளார். அவருடன் மற்றொரு லாரி ஓட்டுநரும் சென்றிருக்கிறார்.
லாரி மன்றாம்பாளையம் வடசித்தூர் சாலையின் வளைவான பகுதியில் சென்றபோது, எதிர்பாராவிதமாக நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளது. ஆனால், நல்வாய்ப்பாக எரிவாயு கசிவு ஏற்படாமல் இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த, ஓட்டுநர் பொன்னரையை பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மற்றொரு ரமேஷ்குமார் எந்தக் காயமின்றி உயிர்தப்பினார்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நெகமம் காவல் துறையினரும், கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு கவிழ்ந்து கிடந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் வடசித்தூரிலிருந்து மன்றாம்பாளையம் கிராமத்திற்குச் செல்லும் சாலை அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது .
இதையும் படிங்க: வீட்டை உடைத்து தரைமட்டமாக்கிய ஒற்றைக் காட்டு யானை: விவசாயி காயம்