ETV Bharat / state

நீதித்துறைக்கு நிதி - முதலமைச்சருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டு - சென்னை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி

தமிழ்நாடு அரசின் உதவியில்லாமல் நாட்டின் முன்னணிலை நீதிமன்றமாக சென்னை உயர் நீதிமன்றம் இருப்பதற்கு சாத்தியமாகியிருக்காது என நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி பெருமிதம் தெரிவித்தார்.

நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்தார்

author img

By

Published : Sep 8, 2022, 8:27 PM IST

கோயம்புத்தூர்: பந்தயசாலை பகுதியில் 2 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை உயர் நீதிமன்ற முதன்மை நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார்.

பின்னர் சிறப்புரையாற்றிய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “பாரம்பரியமான வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த நான், சட்டம் படிக்கவில்லை என்றாலும் சட்டம் மற்றும் நீதித்துறையை தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். கடந்த சில ஆண்டுகளில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு நிகராக நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

ஜனநாயகத்தை காக்கும் கடைசி பொறுப்பு நீதிமன்றத்துக்கு தான் உள்ளது. நீதித்துறைக்கு போதிய நிதி ஆதாரங்கள் ஒதுக்கப்படுவதில்லை. தமிழ்நாடு பட்ஜெட்டிலும் நீதித்துறைக்கான ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. அதிகமான வழக்குகளை கையாளும் மாவட்ட நீதிமன்றங்கள் உள்ளிட்ட கீழமை நீதிமன்றங்களை வலுப்படுத்துவது அவசியமாக உள்ளது. முதலமைச்சரும், நான் பொறுப்பு வகிக்கும் நிதித்துறையும், நீதித்துறை கட்டமைப்புகளில் அதிக முதலீடு செய்வதை எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பந்தாரி, “நான் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தபோது தமிழ்நாடு நிதியமைச்சரை சென்னை விமான நிலையத்தில் சந்தித்தேன். அப்போது நீதித்துறைக்கு என்ன தேவைப்படுகிறது எனக் கேட்டறிந்தார். தற்போது தமிழ்நாடு அரசு நீதித்துறைக்கு ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

முதலமைச்சரின் முன்னெடுப்பில் நீதித்துறை கட்டுமானங்கள் வேகமெடுத்து வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 7 ஏக்கரில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் புதிய நீதிமன்ற கட்டடம் கட்டுவதற்கு வழங்கப்பட்டது. நகரங்களுக்கு நடுவே இவ்வளவு மதிப்புள்ள நிலத்தை வழங்க பல அரசுகள் தயக்கம் காட்டி வந்த சூழலில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவகாரத்தை முதலமைச்சர் தீர்த்து வைத்தார்” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “நிலுவையில் உள்ள வழக்குகள் அதிகரிப்பு பற்றி நிதியமைச்சர் கூறியுள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தான் அதிக வழக்குகளை தீர்த்து வைத்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்குகளை முடித்து வைக்கும் சதவிகிதம் 109 ஆக உள்ளது. ஒரு மாதத்தில் 100 வழக்குகள் தாக்கல் ஆகிற இடத்தில் 109 வழக்குகள் முடித்து வைக்கப்படுகின்றன.

தாக்கல் செய்யப்படும் வழக்குகளை விட முடித்து வைக்கப்படும் வழக்குகள் அதிகமாக உள்ளன. தமிழ்நாடு அரசிடம் 116 நீதிமன்ற அறைகள் வேண்டும் என கேட்கப்பட்டது. ஆனால், 150 நீதிமன்ற அறைகள் கட்டுவதற்கு விரைவாக நிதி ஒதுக்கப்பட்டது பாராட்டுதற்குரியது. நீதித்துறைக்கு தேவையான நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் பணியிடங்களே இருக்கும் நிலையிலும் வழக்குகளை விரைந்து முடித்து வருகிறோம்.

நீதித்துறை விருந்தினர் மாளிகையை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர்நாத் பந்தாரி திறந்து வைத்தார்

சென்னையில் நடைபெற்ற தலைமை நீதிபதிகள் மாநாட்டில் சென்னை உயர் நீதிமன்றம் நாட்டிலேயே முன்னணியில் உள்ளதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாராட்டினார். தமிழ்நாடு அரசின் உதவியில்லாமல் இது சாத்தியமாகியிருக்காது” என பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க:நல்லிணக்கம் வலுப்பெறட்டும் - பிரதமர் ஓணம் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.