கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளி பேரூராட்சி பகுதியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தீயணைப்புத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, 24 மணி நேரமும் கரோனா தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த மனிதர்கள் முதல் கால்நடை வரை பார்த்து பார்த்து பணியாற்றிவருகிறார்.
இதுபோன்ற நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் நோக்கத்தோடு அனைத்து கட்சிக்கூட்டம் கூட்ட வேண்டும் என வலியுறுத்துகிறார். அனைத்துப் பகுதி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அரசு அதனை செய்து வருகிறது" என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலகை உலுக்கும் கரோனா: நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு!