ETV Bharat / state

நான் போலீஸ் எனக்கே பெட்ரோல் இல்லையா - பங்க் ஊழியரை தாக்கியத் தலைமைக் காவலர் - பங்க் ஊழியரை தாக்கிய போலீஸ் இடமாற்றம்

கோயம்புத்தூர்: ஊரடங்கு உத்தரவில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குப் பின் பெட்ரோல் நிரப்ப மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கியத் தலைமைக்காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

petrol bunk worker
petrol bunk worker
author img

By

Published : Apr 2, 2020, 4:20 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் காவல் நிலையத்தில் சர்க்கிள் ரைட்டராக இருப்பவர் மாதப்பன். இவர் நேற்று மாலை சூலூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்ப சென்றுள்ளார். பெட்ரோல் நிலையத்தில் இருந்த பம்பாய் அசோக்ராஜா(26) ஊரடங்கு உத்தரவு காரணமாக பெட்ரோல் விற்பனை 2 மணியுடன் முடிந்துவிட்டது.

எனவே பெட்ரோல் நிரப்ப முடியாது எனக் கூறியுள்ளார். இதற்கு,"நான் போலீஸ் எனக்கே பெட்ரோல் நிரப்ப மாட்டாயா" எனக் கேட்ட சர்க்கிள் ரைட்டர் மாதப்பன், அசோக் ராஜாவைத் தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துவந்துள்ளார். அங்கு அசோக் ராஜாவை மாதப்பன் பிளாஸ்டிக் பைப்பால் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, அசோக்ராஜாவை காவலர் அழைத்துச் சென்ற விவரம் அறிந்த பங்க் உரிமையாளர் காவல் நிலையம் வந்துள்ளார்.

போலீசாரால் தாக்கப்பட்ட அசோக்ராஜா
போலீசாரால் தாக்கப்பட்ட அசோக்ராஜா!

அப்போது, பங்க் ஊழியர் அசோக்ராஜா காவலர் அடித்தது குறித்து பங்க் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்த பங்க் உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது தொடர்பாக புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், சர்க்கிள் ரைட்டர் மாதப்பனை இரவோடு இரவாக ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார். ஊரடங்கை கடைப்பிடித்த பங்க் ஊழியரைக் காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம், சூலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேகமாகப் பரவும் கரோனா தொற்று - அரசு அலுவலர்களுடன் முதலமைச்சர் தீவிர ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.