ETV Bharat / state

குடிப்பதற்கு பணம் கேட்ட மகனை கொலை செய்த தந்தை - covai district news

கோவையில் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்த மகனை தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

the-father-killed-his-son-for-asking-for-money-to-drink

author img

By

Published : Mar 14, 2022, 1:28 PM IST

கோவை: தொப்பம்பட்டி பூங்கா நகர் பகுதியில் வசிப்பவர் முகமது ரபிக்(50). இவரது மனைவி உமேரா. இவர்களது மகன் ஷாஜகான்(22), ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். ஷாஜகானுக்கு குடிப்பழக்கம் உள்ளது. குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று (மார்ச் 14) நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்த ஷாஜகான் தனது தாயாரிடம் மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.

அப்போது தூங்கிகொண்டிருந்த முகமது ரபிக் தனது மகன் ஷாஜகானிடம் வாக்குவதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முகமது ரபிக், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து ஷாஜகானை தாக்கினார்.

இதனால் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து முகமது ரபிக் மற்றும் அவரது மனைவி உமேரா ஆகியோர் நேரடியாக துடியலூர் காவல் நிலையத்திற்கு சென்று தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஷாஜகானின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முகமது ரபிக்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : பைனான்ஸ் உரிமையாளரை கொலை செய்த இந்து முன்னணி நிர்வாகி கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.