கோயம்புத்தூர் வடவள்ளி பகுதியில் "அனன்யாஸ் நானா நானீ ஹோம்ஸ்’’ என்ற ஓய்வூதியர் குடியிருப்பில், சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அங்கு வசிக்கும் சில முதியவர்கள் பிளாஸ்டிக் பை, தேங்காய் தொட்டி, பழைய துணிகள் உள்ளிட்ட பல பொருள்களை கொண்டு கைவினைப் பொருள்களை தயாரித்து வருகின்றனர்.
அதனை காட்சிப்படுத்தும் முயற்சியாக அக்குடியிருப்பு நிர்வாகம் சார்பில் “பேசும் கைகள்’’ என்ற தலைப்பில் முதியவர்கள் செய்த கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்தினர்.
இந்த கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருள்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சிறு பொம்மைகள், அலங்காரப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை அக்குடியிருப்பு முதியோர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்ப உறுப்பினர்களும் நேரில் வந்து பார்த்து சென்றனர்.
இதையும் படிங்க: கீழே கிடந்த நகை, பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மையான தந்தை - மகன்!