ETV Bharat / state

டார்ச்சர் தந்த தனியார் நிதி நிறுவம்: தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!

கோயம்புத்தூர்: என் தற்கொலைக்கு காரணம் இந்த தனியார் நிதி நிறுவனம் மட்டுமே என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

the-company-is-the-reason-for-the-suicide-the-young-man-who-committed-suicide-by-writing-a-letter

author img

By

Published : Feb 18, 2021, 9:35 PM IST

கோவை தொண்டாமுத்தூர் தினம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர், நேற்று (பிப்.17) வீட்டில் தூக்குகிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தொண்டாமுத்தூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் வீட்டில் ஒரு கடிதம் கிடைத்துள்ளது.

அதில் ஆனந்தன், தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மரண வாக்குமூலம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த வாக்குமூல கடிதத்தில், “வீடு கட்ட தனியார் நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்றதாகவும், கரோனா காலம் என்பதால் கடனை கட்ட முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இந்நிலையில், அந்நிதி நிறுவனத்தினால் மிகவும் மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது இறப்பிற்கு முழு காரணம் தனியார் நிதி நிறுவனம் மட்டுமே” என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும், தான் இறந்த பிறகு வீட்டு பத்திரங்களை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று தன் தாயாரிடம் தந்து விடுமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது. இறந்தவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரபல தனியார் நிதி நிறுவனத்தினால், இளைஞர் ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருமணம் மீறிய உறவால் இருவர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.