கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்ட்சியர் ராசாமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”இதுவரை கோவையில் 86 பேர் வைரஸ் பாதிப்பினால் பாதிக்கப்பட்டு சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றனர். கோவையில் எந்த இடங்களிலெல்லாம் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் கூடுதல் கண்காணிப்பு செய்யப்படுகிறது. மருத்துவப் பணியாளர்கள் 700க்கும் மேற்பட்டோர் களத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஷா யோகா மையத்தில் இருப்பவர்கள் அனைவரையும் சோதனை செய்ததில் வைரஸ் பாதிப்பு இல்லை. இருப்பினும் அங்குள்ளவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
அத்தியாவசியத்தேவையை தவிர வீடுகளைவிட்டு வெளிவரும் மக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் கைது செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
கோவையிலுள்ள இறைச்சிக் கடைகள் தமிழ்நாடு அரசின் மறு அறிவிப்பு வரும்வரை இயங்கக் கூடாது” என்றார்.
இதையும் படிங்க:இனி வாரத்துக்கு மூன்று நாட்கள்தான் மளிகைக் கடைகள்: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்