கோவை போத்தனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டப்பட்டிருந்த கதவை உடைத்து, அங்கிருந்த 15 மது பாட்டில்களை சிலர் திருடியுள்ளனர்.
இது குறித்து கடையின் நிர்வாகி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த முத்து, விக்ரம், அபி (எ) அபிஷேக் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து ஐந்து மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மீதமிருந்த 10 மது பாட்டில்களைக் குடித்து முடித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே வெள்ளலூர் பகுதியிலும் டாஸ்மாக் கடையை உடைத்து அங்கு திருடியது தெரியவந்தது. அதன்பின் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாதுகாப்பு கருதி மதுபானங்கள் அரசு குடோனுக்கு மாற்றம்