ETV Bharat / state

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்! - கோவை விமான நிலையத்தில் கண் கவர் நாட்டுப்புற நடனங்கள் புகைப்படம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புறப்பாடு முனையத்தில் விமான பயணிகளை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாட்டுப்புற நடன புகைப்படங்கள், ஓவியங்கள், சுற்றுலாத் தலங்கள் புகைப்படங்களை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்
கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்
author img

By

Published : Apr 17, 2022, 2:07 PM IST

Updated : Apr 17, 2022, 5:07 PM IST

கோயம்புத்தூர்: கோவை சர்வதேச விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு புறப்பாடு முனையத்தில் விமான பயணிகளை கவரும் வண்ணம் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில், தமிழ்நாட்டின் நாட்டுப்புற நடனங்களான கரகாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், புரவியாட்டம், தெருக்கூத்து, காவடி ஆட்டம் போன்றவற்றை சித்தரிக்கும் அழகிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்று (ஏப்ரல் 17) திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், விமான நிலைய வளாகத்தை சுற்றிலும் சுற்றுலாத் தலங்கள் புகைப்படங்கள், மலைப் பிரதேசங்கள், அணைக்கட்டுகள், தமிழ்நாட்டின் பண்டைய கால கோயில்கள் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்

வாலாங்குளம் குளத்தில் விரைவில் படகு சவாரி: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன், "கோவை சர்வதேச விமான நிலையத்தில் பாரம்பரிய நடனங்கள், மலைப் பிரதேசங்கள், பழங்கால கோயில்கள் புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

ஆழியாறு, மேகமலை, வால்பாறை, மருதமலை ஆகிய இடங்களின் புகைப்படங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளன.

கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்
கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்

கோவை விமான நிலையத்தில் முதல் முறையாக இந்த புகைப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை, சேலம் திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களிலும் விரைவில் திறக்கப்படும். கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.

கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்
கண்கவர் நாட்டுப்புற நடன புகைப்படங்கள்

இந்த நிலையில், தற்போது சுற்றுலா தலங்களுக்கு வருகை தருகிறார்கள். கோவை வாலாங்குளம் குளத்தில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும். சிங்காநல்லூர் குளத்தில் படகு சவாரி தொடங்குவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். சுற்றுலாத் துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படும்" என்றார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பவானிசாகரில் பயன்பாட்டிற்கு வராத பழங்குடியினர் அருங்காட்சியகம்

Last Updated : Apr 17, 2022, 5:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.