ETV Bharat / state

'இந்தியா எங்கள் தாய்நாடு; இஸ்லாம் எங்கள் வழிபாடு' - விண்ணைமுட்டிய கோஷங்கள்!

தமிழ்நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் இணைந்து பேரணி நடத்தினார்கள்.

author img

By

Published : Jan 26, 2020, 9:40 PM IST

Updated : Jan 26, 2020, 9:47 PM IST

”இந்தியா எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு” வலுக்கும் கோஷங்கள்

கோவை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக சுமார் 5000-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர். கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி வஉசி மைதானம் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பேரணி

நாகப்பட்டினம்

நாகூரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர். மேலும் தேரடி வீதியில் தொடங்கிய இப்பேரணி காவல் துறையின் அனுமதி இல்லாத காரணத்தால் போராட்டக்காரர்களைக் காவல் துறையினர் நாகூர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு தடுத்துநிறுத்தினார்கள்.

நீலகிரி

தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மத்திய அரசு, தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஊட்டியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பேரணி நடைபெற்றது. இப்பேரணியானது லோயர் பஜார், கமர்சியல் சாலை வழியாக கேஷினோ சாலையில் முடிவடைந்தது. பின்னர் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிடம் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பெண்கள் உள்ளிட்டோர் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் பேரணி நடத்தினார்கள்

திருவண்ணாமலை

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி திருவண்ணாமலை ஈத்கா மைதானம் முதல் காமராஜர் சிலை வரை மாபெரும் பேரணி நடைபெற்றது. 'இந்தியா எங்கள் தாய்நாடு; இஸ்லாம் எங்கள் வழிபாடு' என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

சேலம்

பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள தலைமை அஞ்சல் நிலையம் முன்பு சேலம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வள்ளுவர் சிலை அருகே முடிவுற்றது.

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து 5000ற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கண்டனப் பேரணி ஆர்ப்பாட்டம்

Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி நாடு முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக சுமார் 5000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தப் பேரணி கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் துவங்கி வ உ சி மைதானம் பற்றி நடைபெற்றது. முதலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர் பேரணியில் ஈடுபட்டவர்கள் கைகளில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு மத்திய அரசை கண்டித்தும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரியும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும் மோடி மற்றும் அமித் ஷாவை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் பேசிய முஸ்லிம் அமைப்பினர் மத்திய அரசு உடனடியாக சட்டத்திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினர் இல்லை என்றால் பெரும் இழப்பு அவர்களுக்குத்தான் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.

Conclusion:
Last Updated : Jan 26, 2020, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.