கேரள மாநிலம் கஞ்சிக்கோடை அடுத்த தமிழ்நாடு- கேரள எல்லையான மழம்புழா வேனொலி கிராமத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முக்கிய யானை வழித்தடம் என்பதால் வனப்பகுதியில் இருந்து கிராம பகுதிக்குள் உணவு தேடி வருவது யானைகளுக்கு வாடிக்கையாக உள்ளது.
கடந்த ஆறுமாத காலமாக ஆண் யானை ஒன்று வயல், தோட்டங்களில் உணவு உண்பது வழக்கம் தொடர்ந்து வந்தது.
இந்நிலையில் நேற்றிரவு வனத்தைவிட்டு வெளியே வந்த அந்த ஒற்றை 20 வயது மதிக்கதக்க யானை ஒன்று மழம்புழா வேனொலி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் பயிர்களை சாப்பிட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
அப்போது வயல் வரப்பில் இருந்த தென்னை மரத்தை யானை முறிக்க முயற்சித்த நிலையில் மரம் உடைந்து மின்கம்பத்தில் சாய்ந்து.
அப்போது யானை மீது மின்சாரம் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனையடுத்து இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் யானை இறந்து கிடப்பதை பார்த்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து பாலக்காடு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.