தமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மூன்று பகுதிகளில் பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினரும் சட்டமன்ற துணை சபாநாயகருமான ஜெயராமன் தொடங்கி வைத்தார். இதில், 2,373 முதியோர்களுக்கு ஓய்வூதியத் தொகை தலா ரூபாய் 1000 வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பொளாச்சி ஜெயராமன், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, பொங்கல் பரிசாக 1000ரூபாய், அரிசி, வெல்லம் கரும்பு உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளதாகவும் தகுதியுள்ள முதியோர்களுக்கு இனிவரும் காலங்களில் ஓய்வூதியத்திட்டம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், முதியோர் ஓய்வூதியத்திற்காக அதிகப்படியான நிதி ஒதுக்குவது தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான் என்றார். இந்நிகழ்ச்சியின் போது, கோட்டாச்சியர் ரவிக்குமார், மத்திய கூட்டறவு வங்கித்தலைவர் கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து கிணத்துகடவு, காட்டம்பட்டி, கோவில்பாளையம் பகுதிகளில், 2,063 முதியோர்களுக்கு ஓய்வு ஊதியத்தை வழங்கினார்.
இதையும் படிங்க: ஜெயலலிதா அறிவித்த திட்டத்தை நிறைவேற்றிய எடப்பாடி பழனிசாமி