ETV Bharat / state

தமிழ்நாட்டில் முதல்முறையாக பூனைக் கண்காட்சி!

கோவை: : தமிழ்நாட்டில் முதல் முறையாக கேட்டரி கிளப் சார்பில் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது.

cat seminar
author img

By

Published : Aug 25, 2019, 5:03 PM IST

கோவையில் முதல் முறையாக கேட்டரி கிளப் சார்பில் பூனைகள் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் டெக்சிட்டி ஹாலில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நாட்டு பூனைகள், வீட்டு பூனைகள் வரவழைக்கப்பட்டன. பூனைகளை பற்றி பார்வையாளர்கள் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு வகையான பூனைகளின் படங்கள் கருத்தரங்கில் இடம்பெற்றன.

கோவையில் நடைபெற்ற பூனைகள் கண்காட்சி

இந்நிலையில், இதுகுறித்து கோவை கேட்டரி கிளப் அமைப்பின் அர்த்தனாரி பிரதாப் பேசுகையில், கோவையில் அலையன்ஸ் ஆஃப் கேட் பேன்ஸியர் இந்தியா என்ற அமைப்பின் அங்கீகாரத்துடன், கேட்டரி கிளப் என்ற பெயரில் பூனைகளின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பூனைகளுக்கு வெறி நாய்க்கடி தடுப்பூசி, குடல்புழு நீக்கம் ஆகிய மருத்துவ வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், உலகம் முழுவதும் 93 வகையான பூனை இனங்கள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன. கோவையில் பெர்சியன் லாங் பூனைகள், பெர்சியன் சாட் பூனைகள், ஹிமாலயன் பூனைகள், பெங்கால் பூனைகள், சியாமிஸ் பூனைகள், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகள் உள்ளன என்றார்.

Intro:தமிழ்நாட்டில் முதல்முறையாக பூனைக் கருத்தரங்கம்Body:சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள கோயம்புத்துார் ரோட்டரிகிளப், டெக்ஸ்சிட்டி ஹாலில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது

தமிழ் நாட்டில் முதல்முறையாக பதிவு பெற்ற கோயம்புத்துார் கேட்டரி கிளப், பூனைகள் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. கோவையில் உள்ள நாட்டு பூனைகள், வீட்டு பூனைகள் கொண்டுவரப்பட்டிருந்தன.

பார்வையாளர்கள் பூனைகளை பற்றி அறிந்துகொள்ள வசதியாக பல்வேறுவகையான பூனைகளின் படங்களும், கருத்தரங்குகளும் இடம்பெற்றன.

கோயம்புத்துார், கேட்டரி கிளப் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கில், இந்தியாவின் ஒரே பூனை நடுவர் சுதாகர் கதிகினேனி பேசினார்.

கோயம்புத்துார் கேட்டரி கிளப் தலைவர் அர்த்தனாரி பிரதாப் – கூறுகையில் முப்பதுக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பூனைகள் கொண்டுவரப்பட்டது. பூனை குட்டிகள், பூனைகளை எப்படி பராமரிப்பது, பூனைகளை பெருக்குவது பற்றியும் அறியலாம். சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். பூனைகளை பற்றி அறிந்து கொள்ள இது பேருதவியாக இருக்கும். நிகழ்ச்சிக்கு சுப்ரமணியன் ராயல் கேனின் மற்றும் பாலாஜி பர்மினா விநியோகஸ்தர்கள் உதவி செய்தனர்.

இதே நாளில், பூனைகளுக்கு, கோவை ஜெஎஸ்ஆர் செல்லப்பிராணிகள் சிறப்பு மருத்துவமனை டாக்டர் வேணுகோபால் இலவசமாக வெறி நாய்க்கடி தடுப்பூசி மற்றும் குடல்புழு நீக்கமும் செய்தனர்.

உலகம் முழுவதும் 93 வகையான பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் உள்ளன. கோவையில் பெர்சியன் லாங் பூனைகள், பெர்சியன் சாட் பூனைகள், ஹிமாலயன் பூனைகள், பெங்கால் பூனைகள், சியாமிஸ் பூனைகள், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ, இந்தியன் நாட்டு வகை பூனைகள் உள்ளன.

கோயம்புத்துார் கேட்டரி கிளப் பற்றி:

தமிழ்நாட்டில் முதலாக பதிவு பெற்ற ஒரே கிளப் கோயம்புத்துார் கேட்டரி கிளப். அலையன்ஸ் ஆப் கேட் பேன்சியர் இன்டியா அமைப்பின் அங்கீகாரம் பெற்ற கிளப். பூனைகளின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்பட்டுள்ளது. பூனை வளர்ப்போர், பெருக்குவோர் மற்றும் பூனை விரும்பிகளுக்காக இது துவங்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.