கோயம்புத்தூர்: திருமலையம்பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 25ஆம் ஆண்டு விழா நேற்று (மார்ச் 14) நடைபெற்றது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கான மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், சமூக முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வரும் 25 சமூகப்பணியாளர்களை ஊக்குவிக்ககும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளுக்கு தெலுங்கானா ஆளுநர் விருது வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “வாழ்க்கையில் ஒழுங்குமுறையை கடைபிடிக்க வேண்டும். திட்டமிடுதல் மூலம் வாழ்க்கை வெற்றியாக அமையும். ஒவ்வொரு மணி நேரத்தையும் திட்டமிட்டு வாழ வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பினன்ர் செய்தியாளரைச் சந்தித்த அவர், “புதிய கல்விக் கொள்கையில் நல்ல விடயங்கள் உள்ளன. எல்லா மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. புதிய கல்விக் கொள்கையால் உலக அரங்கில் முன்னேற முடியும்.
தாய்மொழிக் கல்வி, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆகியவை புதிய கல்விக் கொள்கையில் உள்ளன. கொள்கை மாறுபாடு காரணமாக மறுப்பதைவிட அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: அரசு மழலைப்பள்ளியில் கல்வித்துறை இயக்குநரின் மகன் - குவியும் பாராட்டு!