ETV Bharat / state

தொடர் போராட்டங்கள்: வேளாண் சட்டத்திற்கு எதிராக கிளர்ந்தெழும் தமிழ்நாட்டு விவசாயிகள்! - திருப்பூரில் விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்
author img

By

Published : Dec 16, 2020, 9:30 PM IST

Updated : Dec 16, 2020, 10:38 PM IST

மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் விவசாயிகள்

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 21ஆவது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.

இந்தப் போராட்டத்தினை ஆதரித்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று (டிசம்பர் 16) கோயம்புத்தூர், திருப்பூர், மயிலாடுதுறை, கடலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் உள்பட பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்புத்தூரில்...

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த இரண்டு நாள்களாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று (டிச.16) கணியூர் சுங்கச்சாவடியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் . போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூர் விவசாயிகள் போராட்டம்
கோயம்புத்தூர் விவசாயிகள் போராட்டம்

இந்த காத்திருப்பு போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஐ, சிபிஎம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சியினர் கலந்து கொண்டனர். விவசாய சங்கத்தினர் போராட்டம் காரணமாக கணியூர் சுங்கச்சாவடியில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தென்காசியில்..

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி திமுக தலைமையில் அமைந்துள்ள மதசார்பற்ற கூட்டணி சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திருப்பூரில்...

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 3ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த அனைத்து இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினரை காவல்துறையினர் கைது செய்தனர். விவசாயிகளின் இன்றைய போராட்டத்திற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு வழங்கினர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

மயிலாடுதுறையில்....

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமையில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

கடலூரில்..

டெல்லியில் போராட்டக் களத்தில் நிற்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் விவசாய சங்கத்தினருடன், அரசியல் கட்சியினரும் கையில் நெற்கதிர்களை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதைப் போலவே காவிரி டெல்டா பாசன விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் காதில் பூக்களை சுற்றிக்கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

திருப்பத்தூரில்..

திருப்பத்தூர் மாவட்ட அகில இந்திய விவசாயிகளின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் (ஏஐகேஎஸ்சிசி) தொடர்ந்து 3ஆவது நாளாக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இதையும் படிங்க: விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் தள்ளுமுள்ளு: துணை காவல் கண்காணிப்பாளர் பெயர் பேட்ஜ் கிழிப்பு

Last Updated : Dec 16, 2020, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.