ETV Bharat / state

செந்தில் பாலாஜி கைது.. டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. சந்தேகத்தை கிளப்பும் அண்ணாமலை..!

டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய சிபிஐ விசாரணை கோரிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு காவல்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

annamalai
டிஐஜி தற்கொலை
author img

By

Published : Jul 7, 2023, 11:04 PM IST

கோயம்புத்தூர்: கோவை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"டிஐஜி விஜயகுமார் தற்பொழுது நம்முடன் இல்லை என்ற செய்தி அனைவரின் மத்தியில் துக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே காவல்துறையில் நானும் ஒன்பது ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன் என்று நினைக்கின்ற போது எனக்கு துக்கம் இன்னும் அதிகமாக உள்ளது என்றார்.

மேலும், விஜயகுமார் மீது பாஜகவினர், இப்பகுதி மக்கள், மாற்றுக் கட்சியினர் என அனைவரும் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். ஏழை எளிய மக்களுக்கு மிகவும் நெருங்கிய அதிகாரியாக பணிபுரிந்துள்ளார் எனப் பலரும் கூறுகிறார்கள். தற்பொழுது வேறு மாநிலங்களில் நடப்பது தமிழகத்திற்குள்ளும் நடக்க துவங்கி உள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவில் Suicide by Officers பார்த்திருப்போம். குறிப்பாக நார்ஜன் பகுதியில் அதிகாரிகள் அவர்களது துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கலாம்.

தற்போது தமிழகத்தில் முதன்முறையாக இதனை பார்க்கிறோம். இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கூட பொதுப்படையான காரணங்களை நாங்கள் முன் வைக்கிறோம் என தெரிவித்தார். காவல்துறையில் இருக்கக்கூடிய பணி அழுத்தம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவை காரணங்களாக இருக்கும். காவல்துறையை முதலில் சீரமைக்க வேண்டும் என்றார்.

உச்சநீதிமன்றத்தில் 2006 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய சில முக்கியமான விஷயங்களை தீர்ப்பாக அளித்துள்ளதை தமிழக அரசு குழு அமைத்து அதனை மேம்படுத்த வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யக்கூடாது, காவலர்கள் பணி செய்யும் இடங்களில் அடிப்படை தேவைகள் இருக்க வேண்டும்.போக்குவரத்து வசதிகள், கழிவறை வசதிகள், ஏற்படுத்தி தர வேண்டும். கட்டாயமாக வார விடுமுறை ஒரு நாள் அளிக்க வேண்டும்.

தமிழக காவல்துறைக்கு நற்பெயர் வருவதற்கு ரூபாய் 10,000 கோடியை செலவு செய்தாலும் பரவாயில்லை. அதில் என்ன குறைந்து விடப் போகிறது மூன்று லட்சம் கோடிக்கு மதிப்பிடுகிறோம். அதில் பத்தாயிரம் கோடியை காவல்துறை வளர்ச்சிக்கு அளித்தால் நாடு ஒன்றும் தேய்ந்து போகாது.

டிஐஜி விஜயகுமார் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்ற சிறப்பு பார்வையில் நடத்தப்பட வேண்டும். விஜயகுமாருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நடந்த உரையாடல் என்ன அதற்கு முன்பு எந்தெந்த அதிகாரிகளுடன் பேசியிருந்தார் எதுபோன்ற வழக்குகளை இவர் விசாரித்து வந்தார், டிஜிபியில் இருந்து அவருக்கும் இவருக்கும் இருந்த உரையாடல் என்ன? மன அழுத்தத்திற்கான காரணம் என்ன என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும்.

மேலும், உயர் அதிகாரிகள் பேசும் பொழுது கவனம் இருக்க வேண்டும் குடும்பத்தினரின் தனி உரிமை பாதிக்காதவாறு அதிகாரிகள் பேச வேண்டும் என்றார். இறந்த குடும்பத்தின் வாரிசுக்கு குரூப் ஏ அரசு வேலை கொடுக்க வேண்டும். கோவையின் முன்னாள் பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை விசாரணை ஒரு பக்கம் நடந்து வருகிறது. இந்நிலையில் இவருடைய தற்கொலை சம்பவம் நடந்துள்ளது எதையும் தொடர்பு செய்து நாங்கள் பேசவில்லை.

விஜயகுமார் தற்கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிய வேண்டும். ஏனென்றால் தற்கொலை செய்யும் மன அளவில் எந்த அதிகாரியும் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று வர மாட்டார் ஆனால் அதையும் தாண்டி இருக்கின்ற காரணம் என்ன என்று தெரிய வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க:கமல்ஹாசனிடம் கார் சாவியை பெற்றுக்கொண்ட கோவை ஷர்மிளா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.