ETV Bharat / state

'பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழம் உருவாக்கப்படவேண்டும்' - திருமுருகன் காந்தி!

author img

By

Published : May 20, 2022, 5:57 PM IST

தமிழ் ஈழப்படுகொலையின் 13ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பாக நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழ்நாட்டில் இனப்படுகொலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழீழம் உருவாக்க பட வேண்டும்-திருமுருகன் காந்தி

கோவை: கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, 'இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து ஜனநாயக அமைப்பு சார்பாக மீண்டும், மீண்டும் வைக்கின்றோம். இந்த கோரிக்கைகளை உலக அளவில் எடுத்துச்செல்ல வேண்டும். இந்திய அரசு இலங்கைக்கு துணைபோவதை நிறுத்த வேண்டும். அதேபோல் தொடர்ந்து இலங்கையில் தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேச வேண்டும். மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க இந்திய அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏழு கோடி தமிழ் மக்களின் பண்பாடு, அரசியல், பொருளாதார உரிமைகளை வெளிப்படுத்தும் அரசாக தற்போதைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

மாநில உரிமைகளை மறைக்கும் பாஜக: மாநில உரிமைகளை மறுக்கின்ற அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. மாநில அரசுகளின் உரிமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது ஆளுநர் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக உள்ளது.

ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பான தீர்ப்பிலும் மாநில அரசின் அதிகாரத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறது, உச்ச நீதிமன்றம். பாஜக அரசு மாநில உரிமைகளைப் பறிக்க முயன்றதை உச்ச நீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. வெளியுறவுக் கொள்கையில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வைத்துள்ளோம். இந்தியா முழுவதும் ஆளுநர்கள் ஒழிக்கப்படவேண்டும். மாநில சுய ஆட்சியை உயர்த்திப் பிடிக்க உரிய கூட்டணி அமைக்க வேண்டும். மதரீதியாக பிரிக்க நினைக்கும் பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் காங்கிரஸ்: இந்திய அளவிலும் தற்போது விலக்கி வைக்கும் காலம் உருவாகி வருகிறது. நீதிமன்றமும் சட்டப்பேரவையும், மக்கள் மன்றமும் நீதி சார்ந்து கொடுக்கப்பட்ட தீர்ப்புதான், பேரறிவாளனின் விடுதலை. இதற்கு எதிராகப் பேசும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்கள் கோரிக்கைக்கு எதிரான கட்சியாகத் தான் கருதப்படும். பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய காங்கிரஸ், தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பாட்டையே கொண்டு வருகிறது. டெல்லியிலிருந்து தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற கட்சியாகவே பாஜகவுடன் கை கோர்த்திருக்கிறது காங்கிரஸ்’ எனக் கூறினார்.

இதையும் படிங்க:‘இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவேந்துவது குற்றமல்ல அது உரிமை’ - திருமுருகன் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.