ETV Bharat / state

எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்.. சாலையில் சடலமாக கிடந்ததால் பரபரப்பு! - suspectful person

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் நேற்று மாலை திடீரென புகுந்த மர்ம நபரை அலுவலக ஊழியர்கள் துரத்திச்சென்ற நிலையில், அந்த நபர் உயிரிழந்த நிலையில் சாலையில் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்!

author img

By

Published : Jun 13, 2023, 4:04 PM IST

எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்!

கோயம்புத்தூர்: கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வானதி சீனிவாசனுக்கு பந்தய சாலை காவல் நிலையம் அருகில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வந்தார் வானதி சீனிவாசன். இதனை தொடர்ந்து நேற்று(ஜூன் 12) மாலை 5:50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார்.

கதவை சாத்திய மர்ம நபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் என்பவர் பிடித்து வெளியேற்றினார். தொடர்ந்த் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே, அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடைத்த தகவல் காவல்துறையினருக்கு கிடைத்ததுள்ளது . குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Video Leaked: கோர்ட் முன்பு மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி.. தேனியில் நிகழ்ந்த பகீர் சம்பவம்!

வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும் , அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் மர்ம நபர் உள்ளே நுழைவதும் அங்கிருந்த அலுவலக ஊழியர் விஜயன் அந்த நபரை வெளியே தள்ளி வருவதும் கேட்டிற்கு அருகே வந்ததும் அவரை சாலையில் தள்ளி விடும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.

அலுவலகத்திற்குள் நுழைந்த அந்த மர்மநபர் சிறிது நேரத்தில் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேறு ஏதும் காரணத்தால் அந்த நபர் உயிரிழந்தாரா? அல்லது தகராறு ஏதேனும் நிகழ்ந்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து வானதி சீனிவாசன தரப்பிலிருந்தோ, பாஜக தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: கோவையில் நாய், பூனைகளுக்கான எரியூட்டு மின்மயானம் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.