ETV Bharat / state

பொய் புகாரில் ஆசிரியைகள் மீது போக்சோ எனக்கூறி மாணவர்கள் போராட்டம்...!

author img

By

Published : Dec 16, 2019, 3:27 PM IST

கோவை: சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11ஆம் வகுப்பு மாணவர் அளித்த பாலியல் புகாரின் பேரில் ஆசிரியர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sulur
sulur

கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி, சூலூர் விமானப்படை தளத்தின் அருகில் அமைந்துள்ளது. சூலூர் விமானப்படை ஊழியர்கள், வீரர்களின் குழந்தைகள் அந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

சென்ற வியாழக்கிழமை அந்தப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது.

பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றிவிட்டு, தன்னை முதல்வரும், ஆசிரியைகள் சிலரும் சேர்ந்து தாக்கியதாகவும், ஆடைளை களைந்து நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பை கசக்கி துன்புறுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாக, மாணவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவை அரசு மருத்துவமனையில் புகாரளித்த மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போக்சோ பாய்ந்தது

இந்தப் புகாரின் அடிப்படையில் கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா, தமிழரசி, அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கேந்திரிய பள்ளி ஆசிரியர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்கள் போராட்டம்

பீகார் மாணவர்கள் வகுப்புகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது பொய் புகாரளித்து இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இதையும் படிங்க: முஷாபர்நகரில் பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: போலீஸ் விசாரணை

Intro:கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர் புகாரின் பேரில் பள்ளி முதல்வர் உட்பட 4 ஆசிரியர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்Body:கோவை மாவட்டம் சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளி சூலூர் விமான படை தளத்தின் அருகில் அமைந்துள்ளது.சூலூர் விமான படை ஊழியர்கள், வீரர்களின் குழந்தைகள் அந்த பள்ளியில் படித்து வருகின்றனர்.கடந்த வியாழக்கிழமை அந்த பள்ளியில் 11 ம் வகுப்பு படிக்கும் பீகாரை சேர்ந்த மாணவரை ஆசிரியர்கள் கண்டித்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் வியாழக்கிழமை ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்திய கூறி கோவை அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது பள்ளி வகுப்பறையில் சக மாணவர்களை வெளியேற்றி விட்டு தன்னை முதல்வரும் ஆசிரியைகள் சிலரும் சேர்த்து தாக்கியதாகவும், ஆடைளை களைந்து நிர்வாணப்படுத்தி பிறப்புறுப்பை கசக்கி துன்புறுத்தியதுடன், அதை வீடியோவாக பதிவு செய்து கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சூலூர் காவல் துறையில் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் கேந்திரிய பள்ளி முதல்வர் மேகநாதன், ஆசிரியைகள் திவ்யா,தமிழரசி,அருணா ஆகியோர் மீது போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே கேந்திரிய பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கேந்திரிய பள்ளியின் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் சமரசபடுத்தினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் அமர்ந்து மாணவ மாணவிகள் , போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாணவர்கள் வகுப்புகளில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் மீது பொய் புகாரளித்து இருப்பதாகவும் கூறிய மாணவர்கள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடதக்கது
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.