கோயம்புத்தூர் அடுத்த நரசிம்மநாயக்கன் பாளையம் அருகே தென்றல் நகரில் 3 வீதிகள் உள்ளன. கரோனா பாதிப்பு காரணமாக அப்பகுதியில் வசித்த சிலர், கடந்த மாதம் குன்னூர், ஊட்டியில் உள்ள தங்களது கெஸ்ட் ஹவுஸுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில், நேற்று (ஜூன் 25) நள்ளிரவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு பூட்டியிருந்த சுகாதாரத் துறையில் பணிபுரியும் முரளிதரன் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் உள்ள துணிகளை களைத்துள்ளனர். ஆனால் பணம் கிடைக்காததால் அப்பகுதியில் பூட்டி இருந்த மற்ற வீடுகளின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருள்களை களைத்துள்ளனர்.
கதவை உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர், வெளியில் வந்து பார்க்கும் போது வீடுகளின் கதவு உடைந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் அருகில் இருந்தவர்களிடம் செல்போனில் தகவல் அளித்து அப்பகுதி மக்கள் வந்து பார்க்கும் போது கதவை உடைத்த வீட்டில் இருந்து இருவர் தப்பிச் சென்றனர்.
இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, அங்கு வந்த காவல் துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.