ETV Bharat / state

மாணவிகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பதிவேற்றம்! 5 பேர் கைது - upload the image

கோவை: பள்ளி மாணவிகளை வழிமறித்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த ஐந்து இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஐந்து பேர் கைது
author img

By

Published : Jun 25, 2019, 2:57 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் முகமது சபீர் (21), வசந்தகுமார் (21), முகமது அர்ஷத் (20), கமர்தீன் (19), முகமது நியாஸ் (20) ஆவார். இவர்கள் ஐந்து பேரும் பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலரை வழிமறித்து செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

பின்னர் தங்களை காதலிக்கவில்லை என்றால் புகைப்படங்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வோம் மிரட்டியுள்ளனர். இதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவிக்கவே, இளைஞர்கள் மாணவிகளின் புகைப்படத்தை சமூக வலைதளங்களான முகநூல், வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதையறிந்த மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

மாணவிகள் படத்தை சமூக வலைதளத்தில் பதிவேற்றம்

புகாரின் பேரில் வழக்குப்பதிவுச் செய்த காவல் துறையினர் ஐந்து பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து காதலிக்க கூறி மிரட்டி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 5 இளைஞர்கள் கைது.  அதில் ஒருவர் மீது  போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு ஆனைமலை போலீசார் நடவடிக்கை.

பொள்ளாச்சி : ஜூலை : 25

பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்த முகமது சபீர் (21), இவர்களது நண்பர்கள் வசந்தகுமார்(21), முகமது அர்ஷத்(20), கமர்தீன்(19), முகமது நியாஸ்(20),  இவர்கள் 5 பேரும்  பள்ளிக்கு செல்லும் மாணவிகளை வழிமறித்து செல்போன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர் மேலும் மாணவிகளின் புகைப்படங்களை பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மிரட்டியுள்ளனர் இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் இதனையடுத்து முகமது ரியாஸ், வசந்தகுமார், முகமது அர்ஷத், கமருதீன், முகமது சபீர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்தனர் இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை மிரட்டிதோடு தட்டிக் கேட்ட மாணவி களின் பெற்றோர்களுக்கு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளதால் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது முகமது சபீர் மீது மட்டும்  போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 1ரில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட உள்ளனர். 

பள்ளி மாணவிகளை புகைப்படங்கள் எடுத்து மிரட்டி சமூக வலைத்தளங்களில் வாலிபர்கள் வெளியிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.