கோவை மாவட்டம் நெகமத்தை அடுத்த காட்டம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இங்கு மாகாளியப்பன் (52) என்பவர் பள்ளித் தலைமை ஆசிரியராகவும் மற்றொருவர் ஆசிரியராகவும் பணியாற்றிவருகின்றனர். இதில் மாகாளியப்பன் கடந்த சில நாள்களாக நான்காம் வகுப்பு, ஜந்தாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனை அந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். கோபமடைந்த பெற்றோர், இது குறித்து ஆசிரியரிடம் கேட்க பள்ளிக்குச் சென்றுள்ளனர். அப்போது தலைமை ஆசிரியர் விடுமுறையில் சென்றுள்ளதாகத் தகவல் தெரித்துள்ளனர். இதையடுத்து இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலரிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பெற்றோர் கூறியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற அலுவலர்கள் பெற்றோரிடம், முறையாகப் புகார் கொடுத்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இந்நிலையில் இரவு திடீரென பெற்றோர் அனைவரும் திருப்பூர் பொள்ளாச்சி சாலையிலுள்ள காட்டம்பட்டி பேருந்துநிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் உறுதியளித்ததின்பேரில் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.
இதையும் படிங்க: பள்ளியில் மகனுக்கு சீட் கேட்டதில் தகராறு - தந்தை தற்கொலை முயற்சி!