குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கல்லூரிகளுக்கு ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்டம் கண்ணம்பாளையம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரவு நேரத்தில் ஒன்று சேர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கையில் தீப்பந்தம் ஏந்தியபடி குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட மாணவர்கள், இந்தச் சட்டம் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், எனவே இந்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.
இரவு நேரத்தில் மாணவ - மாணவிகள் கையில் தீப்பந்தத்தை ஏந்தியபடி குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதையும் படிங்க: ' திமுக வலையில் சிக்காமல் கமல்ஹாசன் தப்பிவிட்டார் ' - ஆர்.பி.உதயகுமார்!