கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி அருகே தனியார் பள்ளி ஒன்றில் (amass) ஏமேஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் மற்றும் வேர்ல்டு ரெக்கார்டிங் யூனியன் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தனியார் யோகா பயற்சி பள்ளி சார்பில் 7 வயதில் இருந்து 18 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் இன்ஸ்ட்ரூமென்ட்களை பயன்படுத்தி யோகா செய்தனர். கண்ணாடி கூண்டில் உடம்பை வில் போல் வளைத்து யோகா, உயரமான ஏணியில் தலை கீழ் நின்று யோகா போன்றவை செய்து மாணவ, மாணவியர் அசத்தினர்.
அதில் பிரபா நேதா என்ற மாணவி ஒரு மணி நேரம் தமிழ் பாடல்களுக்கு ஹம்மிங் மட்டும் செய்து சாதனை படைத்தார். இந்த சாதனையில் பங்கு பெற்ற அனைவரும் 10 நிமிடங்களுக்கு மிகாமல் தங்கள் சாதனையை செய்து காட்டினார். சாதனை படைத்த அனைவருக்கும் ஏமேஸ் வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சாதனைச் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: டிடிஎஃப் வாசன் தான் கடைசி... இனிமேல்... ஜி.பி. முத்துவின் பேட்டி