கோவை: ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 15 வயது சிறுமி. சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் 10 வகுப்பு முடித்த இவர் நேற்று (ஜூன்.29) பள்ளிக்கு தனது மதிப்பெண் சான்றிதழை வாங்கச் சென்றுள்ளார்.
அவர் குறைவான மதிப்பெண் (180/500) பெற்றிருந்ததால் இதர மாணவர்கள் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். பெற்றோரும் அவரை முடிந்தவரை சமாதானப்படுத்தினர்.

இருப்பினும் மனமுடைந்த அச்சிறுமி, குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பீளமேடு காவல் துறையினர், மாணவியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரடி தாக்கியதில் முதியவர் படுகாயம்