ETV Bharat / state

பொள்ளாச்சியில் முதல் போக சம்பா நெல் சாகுபடி தொடக்கம்! - starts Samba cultivation in pollachi

கோயம்புத்தூர்: ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டதைத் தொடர்ந்து முதல் போக சம்பா நெல் சாகுபடி தொடங்கியது.

rice cultivation
author img

By

Published : Aug 27, 2019, 4:50 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்து ஆனைமலை அருகே உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியை அதிகளவில் செய்துவருகின்றனர். ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 6,400 ஏக்கரில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு உரிய நேரத்தில் மழை பெய்யாததால் முதல் போக சாகுபடியை விவசாயிகள் தாமதமாக தொடங்கினர்.

முதல் போக சம்பா நெல் சாகுபடி starts Samba cultivation in pollachi  pollachi
நாத்து நடும் கிராமத்து பெண்கள்

கடந்த இரண்டு வாரங்கருக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி கடந்த 18ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதைத் தொடர்ந்து நெல் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் சாகுபடிக்கு தயாராகி தண்ணீரை நிரப்பி உழவு இயந்திரம் மூலம் பதப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டிவந்தனர். தொடர்ந்து இன்று வயலில் முதல் போக சாகுபடிக்காக நெற்பயிர் நடவு செய்யும் பணி தொடங்கியது.

முதல் போக சம்பா நெல் சாகுபடி

இன்று காலை முதலே வயலில் இறங்கி பெண்கள் கிராமிய பாடல் பாடியவாறு சோர்வில்லாமல் வயலில் நடவு செய்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இன்று நடவு செய்யும் நெற்பயிர் 120 நாட்களில் கழித்து அறுவடை செய்யப்பட்டு அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

இதேபோல், மழை பெய்து ஆழியார் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவந்தால் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு ஏதுவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Intro:ageriBody:ageriConclusion:பொள்ளாச்சி ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்டதைத் தொடர்ந்து முதல் போக சம்பா நெல் சாகுபடி தொடக்கம் - வயல்களில் பெண்கள் கிராமிய பாட்டுப்பாடி நெல் நடவு செய்தனர்.

பொள்ளாச்சி - ஆகஸ்ட் -27

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் அதிக அளவில் நெல் சாகுபடி விவசாயிகள் வருகின்றனர், ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள 6,400 ஏக்கரில் 4000 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது, இந்நிலையில் இந்த ஆண்டு போதிய நேரத்தில் மழை பெய்யாததால் முதல் போக சாகுபடி தாமதமாக நெல் விவசாயிகள் தொடங்கினர், கடந்த இரண்டு வாரங்கருக்கு முன்பு பெய்த மழை காரணமாக ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவுபடி கடந்த 18ம்தேதி முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது, இதைத்தொடர்ந்து நெல் விவசாயிகள் தங்கள் வயலில் நெல் சாகுபடிக்கு தயாராகினர், வயலில் தண்ணீரை நிரப்பி உழவு இயந்திரம் மூலம் பதப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர், இதைத் தொடர்ந்து இன்று வயலில் முதல் போக சாகுபடிக்காக நெல் பயிர் நடவு செய்யும் பணி தொடங்கியது,இன்று காலை முதலே வயலில் இறங்கி பெண்கள் கிராமிய பாடல் பாடியவாறு சோர்வில்லாமல் வயலில் நடவு செய்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது,இன்று நடவு செய்யும் நெல் பயிர் 120 நாட்களில் கழித்து அறுவடை செய்யப்படும் என்றும் பின்னர் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதலுக்கு செய்யப்படும் என்றும், இதேபோல் மழை பெய்து ஆழியார் அணையில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தால் சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் இரண்டாம் போக நெல் சாகுபடி எதுவாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர், தகுந்த நேரத்தில் விவசாயிகளுக்கு ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதற்கு நெல் விவசாயிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்
பேட்டி -1. பட்டீஸ்வரன் , நெல் விவசாயி, (ஆனைமலை)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.