ETV Bharat / state

நான் ரெடி நீங்க ரெடியா? - அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் பதிலடி

author img

By

Published : Jan 2, 2021, 4:44 PM IST

கோயம்புத்தூர்: ஊழலை நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகிவிடுவாரா என அமைச்சர் வேலுமணி கேட்கின்றார் என்றும் நான் ரெடி நீங்க ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

dmk stalin
dmk stalin

கோயம்புத்தூர் மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் 'அதிமுகவை நிராகரிக்கின்றோம்' என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மக்கள் கிராம சபைக் கூட்டம் இன்று (ஜன. 02) நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், திமுகவினரும் பங்கேற்றனர்.

மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "நான்கு மாதத்தில் என்ன ஊழல் செய்யலாம், அராஜகம் அக்கிரமம் செய்யலாம் என தற்போதைய ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் பெரிய அளவில் அராஜகம் நடக்கிறது. இதற்கு காரணம் அமைச்சர் வேலுமணி.

நான் ரெடி நீங்க ரெடியா?
நான் ரெடி நீங்க ரெடியா?

நானும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவன், உள்ளாட்சியில் நல்லாட்சியைக் கொடுத்தவன் என்ற பெயர் எடுத்தவன் நான். ஆனால் உள்ளாட்சியில் இருந்ததற்கு இப்போது வெட்கப்படுகின்றேன். அந்த அளவிற்கு இந்தத் துறையை அமைச்சர் வேலுமணி கெடுத்திருக்கிறார். ஊழல் ஆட்சித் துறை அமைச்சர் வேலுமணி என்றுதான் அவரைச் சொல்ல வேண்டும். நான் தொலைபேசியில் பேசுவதை காவல் துறையினர் ஒட்டு கேட்கின்றனர்.

இந்த ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கிராம சபைக் கூட்டங்களைச் செயல்படுத்தவில்லை. தேர்தல் நேரத்தில் ஊராட்சிகளில் திமுக கூட்டம் நடத்தியது. இன்று (ஜன. 02) நடக்கும் கிராம சபைக் கூட்டத்திற்குப் போட்டியாக, நாளை அதிமுக சார்பில் நடிகையை வைத்து பரப்புரைக் கூட்டம் இங்கு நடத்துகின்றனர்.

இதில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் கலந்துகொள்கிறாராம். வரும் வழியில் பலூன்களைப் பார்த்தேன், அதைப் பார்த்தவுடன் ராஜேந்திர பாலாஜி இந்தப் பலூன்களைப் பார்த்தால் உடைப்பாரே என்றுதான் தோன்றியது.

திமுக மக்கள் கிராம சபை கூட்டம்
திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் திராணி அதிமுகவினருக்கு இருக்கின்றதா? 38 மாவட்டங்களிலும் உள்ளாட்சித் துறை சார்பில் எல்.இ.டி. விளக்கு ஊழல் நடந்துள்ளது. ஒரு எல்.இ.டி. பல்ப் விலை 450 ரூபாய், ஆனால் அதை ஒரு முறை மூன்றாயிரத்து 337 ரூபாய்க்கு வாங்கியதாகவும், மற்றொரு முறை நான்காயிரத்து 120 ரூபாய்க்கு வாங்கி இருப்பதாகவும் கணக்கு காட்டியுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி மீது ஆறாயிரம் கோடி கான்ட்ராக்ட் ஊழல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரிக்கத் தடை உத்தரவு வாங்கி இருக்கின்றார் தமிழ்நாடு முதலமைச்சர். ஸ்டாலின் பொய் சொல்வதாக என அமைச்சர் வேலுமணி கூறுகிறார்.

இந்தப் புகாரை ஆளுநர் விசாரிக்காவிட்டால் நாங்கள் ஆட்சிக்கு வந்தபின் விசாரிப்போம். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம். ஊழலை நிரூபிக்காவிட்டால் அரசியலை விட்டு விலகிவிடுவாரா என அமைச்சர் வேலுமணி கேட்கின்றார். நான் ரெடி நீங்க ரெடியா?" என்றார்.

இதையும் படிங்க: 'என்னை மிரட்டாதீர்கள்?' - ஸ்டாலினை நோக்கி கேள்விக் கணைகளைத் தொடுத்த பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.