ஜோமாட்டோ ஆன்லைன் உணவு வினியோக நிறுவனம் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாக உள்ளது. ஆன்லைன் புக்கிங் மூலம் உணவுகளை மக்களுக்கு வேண்டிய இடத்திற்கே சென்று வழங்கும் பணியை இந்நிறுவனம் செய்து வருகிறது.
இந்நிறுவனத்தில் கோவையிலிருந்து மட்டும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். தொடக்கத்தில் இவர்களுக்கு ஒரு ஆர்டருக்கு 40 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அது சில மாதங்களுக்கு முன் 30 ரூபாயாக குறைக்கப்பட்டது
இந்நிலையில் தற்போது மேலும் குறைக்கப்பட்டு 25 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மண்டலங்களாக இருந்தது தற்போது 3 மண்டலங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை செய்வோர்களின் அலைச்சல் அதிகமாகவும், வழங்கப்படும் கமிஷன் குறைவாக உள்ளதாகவும் கூறி நேற்று 100க்கும் மேற்பட்ட ஜோமாட்டோ ஊழியர்கள் வேலையை புறக்கணித்து கோவை பந்தயசாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பாஜக நிறைவேற்றிய 32 சட்டங்களும் மக்களின் உரிமையை பறிக்கும் சட்டங்களே!'