இலங்கையைச் சேர்ந்தவர் சந்தன லசந்த பெரேரா என்ற அங்கோட லொக்கா. பிரபல தாதாவான இவர் மீது போதைப் பொருள் கடத்தல் மற்றும் ஏழு பேரை கொலை செய்தது உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த ஜூலை 3ஆம் தேதி அங்கோடாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது அவருடன் இருந்த காதலி அமானி தாஞ்ஜி மற்றொரு பெண்ணான சிவகாமி சுந்தரியுடன் சேர்ந்து பெயரை மாற்றி மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். ஆனால், அவர் ஏற்கெனவே உயிரிழந்ததால், கோவை மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்துள்ளனர். பின்னர் இந்தப் பெண்கள் இருவரும் தியானேஸ்வரன் என்பவரின் உதவியோடு, மதுரைக்கு அங்கோடாவின் உடலைக்கொண்டு வந்து தகனம் செய்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர். கோவையில் ஆகஸ்ட் 2ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமானி தாஞ்ஜி கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜூலை 3ஆம் தேதி கருசிதைவு ஏற்பட்டதால், மருத்துவமனையிலிருந்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 7) சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அமானி தாஞ்சி இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால், சென்னையில் இருந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது. சிவகாமிசுந்தரி, தியானேஸ்வரன் ஆகிய இருவரும் கோவை மத்திய சிறையில் உள்ளனர்.
இதையும் படிங்க...இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கில் திடீர் திருப்பம்!