கோயம்புத்தூர்: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99ஆவது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கலைஞரின் ரசிகர்கள், திமுக தொண்டர்கள் பலரும் கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
30 அடி நீளத்தில் போஸ்டர்: அதன் ஒரு பகுதியாக கோவை மாநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் ரயில் நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பகுதிகளில் கலைஞர் சாதிய அடக்குமுறையைப் பற்றி பேசிய வசனமான "கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்" என்ற வரிகளை போஸ்டராக ஒட்டியுள்ளனர்.
கோவை ரயில் நிலையம், உக்கடம், போன்ற பகுதிகளில் இந்த போஸ்டரை சுமார் 30 அடி நீளத்திற்கு ஒட்டியுள்ளனர். கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி வித்தியாசமான முறையில் கலைஞரின் இந்த ஆவேச வசனங்களை போஸ்டர்களாக அடித்து ஓட்டி இருப்பது கோவை பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: கலைஞரை காணோம்.. அரசு ஆசிரியர்களின் ஆதங்கம்...