கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூரில் தமிழ்நாடு அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் தனபால் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது, "அன்னூர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.
தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அவிநாசி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரிய திட்டங்கள் அனைத்தும் முடிக்கப்பட்ட நிலையில் மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் அடுத்தடுத்து நிவர்த்தி செய்யப்படும்" என்றார்.
இந்நிகழ்ச்சியில், 270 பயனாளிகளுக்கு ரூ.87 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: ஊரடங்கால் முடங்கிய மக்கள் : கைத்தொழில் மூலம் வாழ்வாதாரத்தை மீட்டுத் தந்த ஊராட்சித் தலைவர்!