ETV Bharat / state

'சிட்கோ தொழில்பேட்டையை தடுக்க சிறப்பு தீர்மானம்' - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் சிட்கோ தொழில்பேட்டையை தடுக்க சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

'கோவையில் சிட்கோ தொழில்பேட்டையை தடுக்க சிறப்பு தீர்மானம்'

author img

By

Published : Nov 29, 2022, 8:56 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் பகுதியில் 3,731 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தி சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது. அதற்கான அரசானையை தமிழ்நாடு அரசு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் நிலங்களை கையகப்படுத்தும் அரசின் முடிவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசின் இந்த முடிவை கைவிட வலியுறுத்தி நேற்று (நவ. 28) அன்னூர் பேருந்து நிலையம் அருகே சுமார் 3,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'கோவையில் சிட்கோ தொழில்பேட்டையை தடுக்க சிறப்பு தீர்மானம்'

இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ செல்வராஜ், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி அருண்குமார், வால்பாறை எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி, அவிநாசி எம்.எல்.ஏ தனபால் ஆகியோரும் ஆதரவு தெரிவிக்க சென்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் விவசாயிகளின் 60 ஆண்டுகள் கனவு திட்டமான அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றப்பட்ட நிலையில், அப்பணிகள் 90 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன என்றார்.

இந்த நிலையில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சிட்கோ தொழில்பேட்டையை திட்டமிட்டே அரசு கொண்டுவருவதாக அவர் குற்றம் சாட்டினர். மேலும் அன்னூரில் சிட்கோ அமைக்க அதிமுக ஒரு போதும் அனுமதிக்காது என கூறிய அவர் விவசாயிகளுடன் அதிமுக போராடும் என கூறினார்.

இது சம்பந்தமாக வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் தங்களது எம்.எல்.ஏக்கள் மூலம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீபத்திருவிழா: இரண்டாம் நாள் இரவு சாமி ஊர்வலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.