ETV Bharat / state

கடந்த ஆட்சியை விமர்சிக்காமல் பொதுமக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுங்கள் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி - திமுகவை விமர்சித்த எஸ்பி வேலுமணி

கோவையில் நீர்மோர் வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கடந்த ஆட்சியை விமர்சிக்காமல் பொதுமக்களுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று திமுகவை விமர்சித்துள்ளார்.

Etv Bharat திமுகவை விமர்சித்த எஸ்.பி. வேலுமணி

author img

By

Published : Mar 25, 2023, 4:49 PM IST

திமுகவை விமர்சித்த எஸ்.பி. வேலுமணி

கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் தொகுதி கோவைபுதூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் வழங்கும் தொடக்க விழா நடைபெற்றது. அதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்துகொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள் மற்றும் நீத்மோர் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் அதிமுக மட்டும் தான் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தல்களை அமைத்து உதவி வருகிறது. கோவைக்கு என்றைக்கும் நல்ல பல திட்டங்களை கொடுத்தது அதிமுக தான். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் கோவைக்கு கொண்டு வரவில்லை.

ஏற்கனவே, அதிமுக கொண்டு வந்த திட்டங்களையும் தற்போதைய தமிழ்நாடு அரசு வேகமாக முடிப்பதில்லை. அதிமுக சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இனிமேலாவது விடியா அரசு விழித்துக்கொண்டு மக்கள் பிரச்னைகளில் பாகுபாடு பார்க்காமல் நிறைவேற்ற வேண்டும்.

ஒட்டுமொத்தமாக திமுகவின் மீது பெரும் அதிருப்தி உள்ளதால் எப்போது தேர்தல் நடந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவார் என்ற நம்பிக்கை உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்களைப் பற்றி தெரியாத விளம்பர முதலமைச்சராக இருக்கிறார்” என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் இன்று பத்திரிகைத்துறை மிரட்டப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமான செய்திகளை வெளியிடுமாறு அச்சுறுத்தப்படுகிறது என தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சி காலத்தில் கோவையில் எந்தவித சாலைப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அவர்,

அதிமுக ஆட்சிக்காலத்தில் கோவையில் சாலை பணிகள் மட்டுமல்லாது பல்வேறு திட்டப் பணிகளை செய்து கோவையை மாற்றி அமைத்தது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த பணியும் செய்யவில்லை. ஏற்கனவே திட்டமிட்ட பணிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.

குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை கூட மூடி சரி செய்யவில்லை. மீடியாவிற்காக பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆளுங்கட்சியினர் பதிலளித்துவிட்டு செல்கிறார்கள். கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத திட்டங்களை அதிமுக ஆட்சியின் போது செய்தது மக்களுக்கு தெரியும். கடந்த ஆட்சியை பற்றி குறை கூறாமல் மக்களுக்கு தேவையானவற்றை ஆளுங்கட்சியினர் செய்ய வேண்டும் என தெரிவிததார்.

இதையும் படிங்க: "ராகுல் காந்தியின் தகுதி நீக்க ஆணையை திரும்பப் பெறுக" - திருமாவளவன் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.